சாராயம் விற்ற வாலிபர் கைது
மயிலாடுதுறையில் சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
மயிலாடுதுறை தருமபுரம் சாலை காவிரி ஆற்றங்கரையில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில்மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஆலமரத்தடியில் சாராயம் விற்ற மயிலாடுதுறை தருமபுரம் சாலை பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சத்தியசீலன் (வயது 32) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.