கோபி மதுவிலக்கு போலீசார் அந்தியூர் புதுப்பாளையம் கொன்னமரத்தையன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தனர். அப்போது அதில் இருந்து கேனில் 10 லிட்டர் சாராயம் மற்றும் 20 சாராய பாக்கெட்டுகள் இருந்தன. இதனால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் திருச்சி உறையூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 27) என்பதும், அங்கு நின்றுகொண்டு அவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செந்தில்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.