கடன் கொடுக்க மறுத்த முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் கடன் கொடுக்க மறுத்த முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-25 08:22 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எருக்குவாய் ஊராட்சி, சேர்ப்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சிவா (வயது 57). இதே பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் என்ற ரவி (29). ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் சேர்ப்பேடு கிராமம், பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்த சிவாவிடம் ரூ.500 கடனாக கேட்டார். அதற்கு சிவா என்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சிவாவை சரமாரியாக தாக்கினார். இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிவா ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். பின்னர் பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து அவரது உத்தரவின் பேரில் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்