மதுபிரியர்கள் சாராய கடைக்கு சென்று வர ஏதுவாக தென் பெண்ணையாற்றில் மண்சாலை அமைத்த வாலிபர் கைது

மதுபிரியர்கள் சாராய கடைக்கு சென்று வர ஏதுவாக தென் பெண்ணையாற்றில் மண்சாலை அமைத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-02-15 18:45 GMT

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிக்கிராம்பட்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே மது பிரியர்கள் புதுச்சேரி பகுதி சாராய கடைகளுக்கு சென்று வர ஏதுவாக மண்சாலை அமைக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் இரவோடு இரவாக சென்று, அந்த மண் சாலையை அகற்றி பள்ளம் தோண்டி யாரும் சென்று வர முடியாதபடி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், புதுச்சேரி மாநிலம் மணமேடு பகுதியை சேர்ந்த அசோக் (வயது 24) என்பவர் சிலருடன் சேர்ந்து நெல்லிக்குப்பம் பகுதி மதுபிரியர்கள் சாராய கடைகளுக்கு சென்று வர ஏதுவாக ஆற்றின் குறுக்கே சாலை அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து அசோக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சோரியாங்குப்பம் சேர்ந்த செந்தில் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்