போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபருக்கு வலைவீச்சு
சங்கரன்கோவிலில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வைரமுத்து மகன் கார்த்திக் (வயது 23) என்பவர் ஆடிக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை ஓரமாக வரும்படி கூறியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் போலீசாரை அவதூறாக பேசி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏட்டு பழனிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார்த்திக்கை தேடி வருகின்றனர்.