மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-14 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே வெவ்வால் ஓடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை மகன் பாலு. இவர் குருக்கத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகில் மோட்டார் பழுது பார்க்்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாலு பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.அப்போது சந்தை தோப்பு வாய்க்கால் மதகு அருகே சென்ற போது சந்தை தோப்பு பகுதியை சேர்ந்த சம்பத் மகன் கிரன்குமார் (வயது 23) என்பவர், பாலுவை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி அவரது சட்டையில் வைத்திருந்த ரூ.200-யை பறித்து கொண்டு இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாலு கீழ்வேளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்