தோழிக்கு 'வாட்ஸ்அப்'பில் தகவல் அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் தோல்வியால் தனது தோழிக்கு ‘வாட்ஸ்அப்’பில் தகவல் அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-27 22:57 GMT

சென்னை,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (வயது 21). இவர், கடந்த 4 வருடங்களுக்கு மேலாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது அக்கா துர்கா வீட்டில் தங்கியிருந்தார். ஆர்.கே.மடம் அருகே உள்ள பழக்கடையில் வேலை பார்த்தும் வந்தார்.

விஷ்ணுபிரியா தன்னுடன் வேலைப்பார்த்து வந்த வாலிபர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாலிபர், விஷ்ணுபிரியாவின் காதலை நிராகரித்து விட்டார். இதில் மனமுடைந்த விஷ்ணுபிரியா தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

இளம்பெண் தற்கொலை

நேற்று முன்தினம் தான் தற்கொலை செய்யப்போகும் தகவலை தனது தோழி ரேவதிக்கு 'வாட்ஸ் அப்'பில் அனுப்பிவிட்டு, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரேவதி கொடுத்த தகவலின்பேரில் துர்கா வீட்டில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது, விஷ்ணுபிரியா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் கொடுங்கையூர் சோலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெனிபர் (21). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து புளியந்தோப்பைச் சேர்ந்த விஜய் என்பவருடன் ஒரு வருடமாக ஜெனிபர் குடும்பம் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை ஜெனிபர் திடீரென தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெனிபர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்