எரியோடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
எரியோடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
எரியோடு அருகே மோர்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிக்கம்மாள்புரத்தை சேர்ந்த ராமசாமி-திருமக்காள் தம்பதியின் மகன் விக்னேஷ்குமார் (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, பெற்றோருடன் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக வேடசந்தூர் அருகே புளியம்பட்டியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு விக்னேஷ்குமார் வந்திருந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விக்னேஷ்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.