தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் ரெயிலில் அடிபட்டு பலி
குடியாத்தத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் ரெயிலில் அடிபட்டு பலியானார்.
குடியாத்தம் அடுத்த அநாகநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சுஜித்ரா (வயது 27). இவர் நேற்று குடியாத்தம்- வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.