காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஸ்ரீமுஷ்ணத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-17 18:59 GMT

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் அதே பகுதியை சேர்ந்த சத்தியப்பிரியா(வயது 26) என்பவரும் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாள். மணிகண்டன் சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார். சத்தியப்பிரியா தனது மகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த மணிகண்டன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சத்தியப்பிரியா ஏன் குடித்து விட்டு வருகிறீர்கள் என மணிகண்டனை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சத்தியப்பிரியா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்