சூளகிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சூளகிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா அலகுபாவியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 21). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.