மது குடித்த தொழிலாளி திடீர் சாவு

மது குடித்த தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-09-16 18:45 GMT

திருப்புவனம்,

பூவந்தி அருகே உள்ள படமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குருமாரி (வயது 42). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு குருமாரி மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளாராம். அப்போது அவர் திடீரென வாந்தி எடுத்துள்ளார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குருமாரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்