வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி
வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் தொழிலாளி பிணமாக தொங்கினார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் உலகு கண்ணன்(வயது 34). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகாத நிலையில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உலகு கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.