காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-01 18:45 GMT

மதுரை கீழவெளிவீதியை சேர்ந்த முருகன் மகள் நந்தினி(வயது 22). இவரும், மதுரை அனுப்பானடியை சேர்ந்த தங்கராஜ் மகன் வினோத்குமார் என்பவரும் வீட்டுக்கு தெரியாமல் காதலித்து கடந்த ஆண்டு மதுரையில் திருமணம் செய்து கொண்டனர். கணவன், மனைவி இருவரும் ராமநாதபுரம் சிவன்கோவில் வடக்குரத வீதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நந்தினி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முருகன், ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்