கோர்ட்டில் தகராறு செய்த பெண்
பெரியகுளம் கோர்ட்டில் தகராறு செய்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை டக்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மகள் பெனிஸ்டன் ஜோயல். இவர், ஒரு வழக்கு விசாரணைக்காக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோா்ட்டு வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தார். கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது பெனிஸ்டன் ஜோயல் திடீரென எழுந்து விசாரணைக்கு இடையூறு செய்து தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் ஈஸ்வரி, தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பெனிஸ்டன் ஜோயல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.