கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் வெட்டிக்கொலை

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;

Update:2023-10-23 02:46 IST

தனியார் நிறுவன ஊழியர்

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 33). இவர் பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரவீணா(24). இவர்களுக்கு சர்வேஸ்வரன்(5), யோகித்(3) என 2 மகன்கள் உள்ளனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சர்வேஸ்வரன், யோகித் ஆகியோர் சிறுவயலூரில் உள்ள பிரவீணாவின் பெற்றோர் வீட்டில் உள்ளனர்.

வெட்டிக்கொலை

இந்நிலையில் நேற்று ராஜ்குமார் இரவு பணிக்கு புறப்பட்டார். அப்போது பிரவீணாவை, தனது சித்தப்பா வீட்டில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். செங்குணம் பிரிவு சாலையில் சென்றபோது அவர்களை ஒரு கும்பல் திடீரென வழிமறித்து, அரிவாளால் வெட்டியது.

இதில் பிரவீணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜ்குமாருக்கு கையில் வெட்டு விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலைக்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்