தஞ்சையை அடுத்த ஆர்.சுத்திப்பட்டு பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் சம்பவத்தன்று பெண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக மிதந்து சென்ற அந்த பெண் தஞ்சை பொன்நகர் வாரி தெருவை சேர்ந்த பாக்கியம் (வயது 54). என்பதும், சம்பவத்தன்று வாய்க்காலில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் தவறி விழுந்து பலியானதும் தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.