சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் பலி
சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் பலியானார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார் கோவில், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மலர்கொடி (வயது 47), பலூன் வியாபாரி. இவா் நேற்று முன்தினம் மாலை பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வியாபாரத்தை முடித்து கொண்டு அந்த வழியாக துறையூர் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தில் பயணம் செய்தாா். அப்போது ஆலத்தூர் கேட்-துறையூர் சாலையில் குரூர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மலர்கொடி உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.