பொங்கல் பண்டிகையையொட்டி களை கட்டிய ஆட்டுச்சந்தை
பொங்கல் பண்டிகையையொட்டி ஆட்டுச்சந்தை களை கட்டியது.;
புதுக்கோட்டையில் உள்ள சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். இதில் பண்டிகை காலங்களில் சந்தையில் ஆடுகள் அதிகம் விற்பனையாகும். புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, சிவகங்கை என பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த இறைச்சி வியாபாரிகளும் இங்கு வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வது உண்டு. இதேபோல் ஆடு வளர்ப்பவர்களும், ஆடு விற்பனையை தொழிலாக கொண்டவர்களும் ஆடுகளை விற்பனைக்காக சந்தைப்பேட்டைக்கு கொண்டு வருவார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. இதில் ஒரு ஆடு குறைந்தது ரூ.20 ஆயிரம் முதல் ஆடுகள் விற்பனையானது. வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர். இந்த சந்தையில் நேற்று பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்றதாக கூறப்பட்டது.