காற்றாலை இறக்கை மீது லாரி மோதி விபத்து

கன்டெய்னர் லாரியில் ஏற்றிச் சென்ற காற்றாலை இறக்கை மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2022-11-23 12:20 GMT

அனந்த்பூரிலிருந்து காற்றாலை இறக்கை ஏற்றுக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கயத்தாறு பகுதிக்கு சென்னை வழியாக தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக காற்றாலை இறக்கையை சுமந்து சென்ற லாரி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இடது புறமாக திரும்பியது.

இந்த லாரியின் பின்னால் பெங்களூரை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி சுமார் 50 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறக்கை திரும்புவதை கவனிக்காமல் இறக்கை மீது மோதியது. இதனால் இறக்கையின் பின்பக்கம் உடைந்தது. இன்காரணமாக அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரிகளை அற்புதப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இதுகுறித்து லாரி டிரைவர்களிடம் பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்