சேலம் ஏற்காட்டில்மரத்தில் மலைப்பாம்பு ஏறியதால் பொதுமக்கள் அச்சம்

Update: 2023-08-27 19:56 GMT

சேலம்

ஊர்ந்து செல்லும் பாம்பை பார்த்தாலே மக்கள் நெஞ்சம் பதைபதைக்கும். இந்த நிலையில் சேலம் ஏற்காடு வாழவந்தி பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு உயரமான மரத்தில் நேற்று மாலை ஒரு மலைப்பாம்பு வளைந்து, வளைந்து மரத்தின் மேல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கரமான காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்