80 கி.மீ வேகத்தில் ரெயில் இயக்கலாம்

மதுரையில் இருந்து போடிக்கு அகல ரெயில்பாதையில் 80 கி.மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்க பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.

Update: 2023-01-04 18:45 GMT

போடி-மதுரை இடையே அகல ெரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் முதல் கட்டமாக மதுரையில் இருந்து தேனி வரை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்ேபாது தேனியில் இருந்து 15 கி.மீட்டர் தூரம் போடி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. போடி ரெயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. ரெயில் பாதை பணி நிறைவடைந்ததையொட்டி, கடந்த மாதம் 29-ந்தேதி போடியில் இருந்து தேனி வரை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ஆய்வு செய்தார். அப்போது ரெயில் என்ஜின் மற்றும் 3 பெட்டிகளுடன் 118 கி.மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்தநிலையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மதுரை-போடி அகல ெரயில்பாதையில் 80 கி.மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கிக் கொள்ளலாம். ெரயில் பாதையில் சில இடங்களில் கிளாம்புகள் சரி செய்ய வேண்டும். தங்கப்பாலம் என்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பைப் லைன்களில் மாற்றம் செய்ய வேண்டும். ெரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாள்வதற்கு போதிய ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து மதுரை-போடி இடையே ெரயில்களை இயக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்