புகையிலை விற்ற வியாபாரி கைது
எட்டயபுரம் அருகே புகையிலை விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மணி என்ற மாடசாமி (வயது 43). இவர் எட்டயபுரம் மேல வாசலில் குளிர்பானம் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாடசாமியை கைது செய்து, அங்கிருந்த 33 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.