கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து

கனியாமூரில் கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-12-03 18:45 GMT

சின்னசேலம்

தியாகதுருகம் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(வயது 27). டிராக்டர் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த விவசாயியின் நிலத்தில் அறுவடை செய்த கரும்புகளை ஏற்றிக்கொண்டு சென்னை-சேலம் தேசிய நெடுங்சாலை வழியாக பெரம்பலூர் மாவட்டம் உடும்பியத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தார். கனியாமூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிராக்டர் டயர் பஞ்சரானதால் டிராக்டரை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஆகாஷ் சென்றார்.

பின்னர் நேற்று மதியம் கடைக்கு பஞ்சர் ஒட்டுவதற்காக டிராக்டரை ஆகாஷ் திருப்பியபோது பாரம் தாங்காமல் சாலையிலேயே கவிழ்ந்தது. இதனால் டிராக்டரில் இருந்த கரும்பு கட்டுகள் அனைத்தும் சாலையில் விழுந்து பரவி கிடந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாற்றுப்பாதை வழியாக வாகனங்களை திருப்பி விட்டனர். பின்னர் பொக்லைன் மற்றும் கிரேன் எந்திரங்கள் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த டிராக்டர் மற்றும் கரும்பு கட்டுகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்தக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்