புகையிலைப்பொருட்கள் விற்றவர் சிக்கினார்
போடியில் புகையிலைப்பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
போடி தாலுகா போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் சேகர் (வயது 47) என்பவரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த 33 பாக்கெட்டுகள் புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.