சுல்தான்பத்தேரி - புல்பள்ளி சாலையில் நடந்து சென்ற புலி-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

சுல்தான்பத்தேரி - புல்பள்ளி சாலையில் நடந்து சென்ற புலி-சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

Update: 2022-09-24 18:45 GMT

கூடலூர்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில் இருந்து புல்பள்ளிக்கு செல்லும் சாலையில் முத்தங்கா சரணாலயத்துக்கு உட்பட்ட செதலயம் பகுதியில் கேரள போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது புலி ஒன்று சாலையை கடந்து சென்றது. இதைக்கண்ட போலீசார் ஜீப்பை நிறுத்தி முகப்பு விளக்கு வெளிச்சத்தில் புலியை செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்தனர். மேலும் புலியும் சாலையைக் கடந்த படி வனத்துக்குள் சென்றது. இந்த காட்சியை சமூக வலைத்தளங்களில் போலீசார் பதிவிட்டனர். தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்