கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்
பாளையங்கோட்டை,
பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசார் நேற்று முன்தினம் தியாகராஜநகர் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை சேர்ந்த பிரபாகரன் (வயது 20) என்பதும், கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரை பணிசெய்ய விடாமல் தகராறு செய்தாராம். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.