மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபருக்கு தர்மஅடி
மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனா்.
விழுப்புரம்:
விழுப்புரத்தை அடுத்த பிடாகம் பஸ் நிறுத்தம் அருகில் வாலிபர் ஒருவர், அங்கு நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்றார். இதைப்பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள், அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து அவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில் அவர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த செல்வகார்த்தி (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த செல்வகார்த்தி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.