பொள்ளாச்சி பகுதியில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது

பொள்ளாச்சி பகுதியில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது

Update: 2022-12-05 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ்காரர்கள் மாதவகண்ணன், லியோ அருள்ராயப்பன் ஆகியோர் ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தப்பி சென்றனர். இதையடுத்து போலீஸ்காரர்கள் அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர். நேரு வீதி பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அந்த நபரையும், அவர் வைத்திருந்த பை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதற்கிடையில் பிடிபட்ட நபரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்ததில், கையுறை, பிளேடு, கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் ரத்தினசபாபதிபுரத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு, பூட்டி கிடக்கும் வீடுகளில் கைவரிசையை காட்டுவதற்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வகுமார், விஜி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் திருட பயன்படுத்த கொண்டு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்