தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-07-23 00:19 IST

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவரது மனைவி கவிதா (வயது 48). இவர்கள் வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்கு, அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜின் மகன் பிரேம்ராஜ் (32) என்பவர் வந்து தகராறு செய்துள்ளார். அதை தட்டிக்கேட்ட தம்பதியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்