5 பேரை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

கோவில் விழாவில் 5 பேரை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-02 18:59 GMT

வத்திராயிருப்பு,

கோவில் விழாவில் 5 பேரை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவில் திருவிழா

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு ஒலிபெருக்கியில் பாட்டு போட்டுள்ளனர்.

இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது31) என்பவர் மதுபோதையில் அங்கு வந்துள்ளார். ஒலிபெருக்கியில் போடப்பட்ட பாட்டை நிறுத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்த தகராறில் மது பாட்டிலை உடைத்து, அங்கு நின்றிருந்த முத்தையா (47), சேகர் (44), ராம்குமார் (19), சுந்தரமூர்த்தி (36), கருப்பசாமி (56) ஆகிய 5 பேரை ஆனந்த் குத்தியதாக கூறப்படுகிறது.

வாலிபர் கைது

இதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதில் படுகாயம் அடைந்த ஊர் நாட்டாண்மை முத்தையா, சேகர் ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுபற்றி அறிந்ததும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அவர்களது உறவினர்கள் திரண்டனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஆனந்தை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்