பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-29 20:48 GMT

திருவெறும்பூர்:

பாலியல் தொந்தரவு

திருச்சி அருகே உள்ள மணிகண்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் அஜித்(வயது 22). இவர், பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்ததாத கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவி, பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்து உள்ளார். ஆசிரியர், அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் தாய் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போக்சோவில் கைது

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர், அதே பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தது போலீசாருக்கு தெரியவந்தது. ெதாடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்