17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்

17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர், திருமணம் செய்து வைத்தவர் மீது வழக்கு

Update: 2022-05-31 18:41 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் ராஜீவ் என்பவர் கடந்த 4 வருடங்களாக 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5-ந்் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் பகுதியில் இருவரும் வசித்து வந்தனர். தற்போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனால் திருப்பூர் பகுதியில் உள்ள ராஜிவ் சகோதரி ராஜேஸ்வரி கடந்த 26-ந் தேதி இருவரும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் தந்தை நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீதும், திருமணம் செய்து வைத்த ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் வழக்குப் பதிவு செய்து அக்காள், தம்பியை வலை வீசி தேடி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்