ரூ.4 லட்சம் கடனை திரும்ப தராததால் வாலிபர் கழுத்தறுத்து கொலை

திருவெறும்பூர் அருகே ரூ.4 லட்சம் கடனை திரும்ப தராததால் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-30 19:51 GMT

திருவெறும்பூர் அருகே ரூ.4 லட்சம் கடனை திரும்ப தராததால் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ரூ.4 லட்சம் கடன்

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் என்ற மீனாட்சி சுந்தர் (வயது 28). இவர் பர்மா காலனி சேர்ந்த வடைகடை வைத்து வியாபாரம் நடத்தி வரும் ராமன் (56) என்பவரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம். இந்த நிலையில் ராமன் அந்த கடனை திரும்ப கேட்டபோது, சுந்தர் கொடுக்கவில்லையாம். இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து ராமன் தனது வடை கடையில் இரவு நேரத்தில் `சிக்கன் 65' போட்டு வியாபாரம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தனது கடனை அடைக்குமாறு சுந்தரிடம் கூறி உள்ளார்.

கழுத்தறுத்து கொலை

அதன்பேரில் ராமன் வடை கடையில் சுந்தர் `சிக்கன் 65' வியாபாரம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னரும் சுந்தரால் கடனை அடைக்க முடியவில்லை. இந்த நிலையில் ராமன், சுந்தரை தனியாக அழைத்துக்கொண்டு பாலாஜி நகர் கவுற்று வாய்க்கால் பாலம் பகுதிக்கு சென்றார். கடனை திரும்ப தராததால் ஆத்திரத்தில் இருந்த ராமன் சுந்தருக்கு அதிக அளவில் மது வாங்கி கொடுத்தார். பின்னர் போதை அதிகமாகியதும் சுந்தரின் கை, கால்களை கயிற்றால் கட்டி, ஏற்கனவே புதியதாக வாங்கி வைத்திருந்த கத்தியால் சுந்தரின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிபதாக இறந்தார்.

போலீசில் ஆஜர்

இதன்பின் ராமன் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து சுந்தரை கொலை செய்ததை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர். இந்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்