தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிறையில் அடைப்பு

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2022-12-30 19:34 GMT

வாலிபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருச்சி மாவட்டம், தொட்டியம் வடுக தெருவை சேர்ந்த ஜெயபிரகாசின் மகன் சுபாசை (வயது 25) மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுபாசை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சுபாஷ் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் 6 திருட்டு வழக்குகளிலும், மருவத்தூர், வி.களத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கிலும், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

மேலும் சுபாஷிடம் இருந்து 20 பவுன் நகை, ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சுபாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்