சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் பலி

ஜோலார்பேட்டையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் பலியானார்.

Update: 2023-04-09 12:33 GMT

ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் எதிரேயுள்ள சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் நிலை தடுமாறி விழுந்து இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கைக்கரசி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து இறங்கி ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக வரும்போது சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்