ஆனைமலை
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோயல் ஜானி(வயது 25). இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார். இந்த நிலையில் ஜோயல் ஜானி நேற்று காலை ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற அவர், நீரில் மூழ்கி தத்தளித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியாமல் போனதால், ஜோயல் ஜானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.