கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
அலங்காநல்லூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
அலங்காநல்லூர்,
மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 24).டிப்ளமோ பட்டதாரி. இவர் தனது நண்பர்களுடன் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது முத்துக்குமார் திடீரென்று கிணற்று தண்ணீரில் மூழ்கினார். வெளியே வரவில்லை. அவரது நண்பர்களால் அவரை மீட்க முடியவில்லை. இது தகவலறிந்த அலங்காநல்லூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் மூழ்கி இறந்த முத்துக்குமார் உடலை கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்கு பதிவு செய்து, கிணற்று தண்ணீரில் மூழ்கி முத்துகுமார் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றார்.