மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

சாயல்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-18 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் லட்சுமணன் (வயது 24) இவர் தனது தந்தை பனைத்தொழிலில் ஈடுபட்டு உள்ளதால் சாயல்குடி அருகே உள்ள கடுகு சந்தை பகுதியில் குடிசையில் தங்கி இருந்தார். இந்த நிலையில் லட்சுமணன் தள்ளுவண்டியில் குடங்களில் தண்ணீர் எடுத்து கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிக்கலை சேர்ந்த காளிமுத்து(40) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற லட்சுமணன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த காளிமுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்