மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் வாலிபர் பலியானார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் முஸ்லிம் தெருவில் வசித்து வருபவர் மகபூப்ஜானின் மகன் குலாம் ஷெரீப் (வயது 35). இவர் நேற்று முன்தினம் பெரம்பலூரில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இரவில் வாலிகண்டபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தனியார் பள்ளி எதிரே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த குலாம் ஷெரீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.