பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் சாவு
பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் சாவு
வலங்கைமான்
வலங்கைமான் பைத்தஞ்சேரி அருகே திருவாரூர்- நீடாமங்கலம் மெயின் ரோட்டில் நேற்று அதிகாலை ஈரோட்டிற்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வையகளத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 37) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் பஸ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சக்திே்வல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.