வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

செம்பனார்கோவில் அருகே வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். இந்த விபத்தில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Update: 2023-09-18 18:45 GMT

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் அருகே வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். இந்த விபத்தில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வாலிபர் பலி

கொள்ளிடம் அருகே மாங்கானம்பட்டு கிராமத்தை சேர்ந்த செழியன் மகன் தேவமணி (வயது 24). இவர் கடந்த 16-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான வேல்முருகன், அஜய் ஆகியோருடன் காரைக்காலில் இருந்து கொள்ளிடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.மோட்டார் சைக்கிளை அஜய் ஓட்டினார்.

செம்பனார்கோவில் அருகே பூந்தாழை பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த வாய்க்கால் மதகில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பின்புறம் அமர்ந்திருந்த தேவமணி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

2 பேர் படுகாயம்

மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வேல்முருகன் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியிலும், அஜய் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்த தேவமணியின் உடல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்