திருப்புவனம்
சிவகங்கை அருகே உள்ள சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவுக்கரசு (வயது 26). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் திருமாஞ்சோலை வந்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கைக்கு திரும்பி உள்ளார். சித்தாலங்குடி சுடுகாடு அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.