விபத்தில் வாலிபர் பலி

விருதுநகரில் விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-10-21 19:36 GMT

விருதுநகர் சிவகாசி நாரணாபுரம்ரோட்டை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). இவரது மகன் மகேந்திரன் (19). சம்பவத்தன்று மகேந்திரன் தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் விருதுநகர் வந்து கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் சிவகாசி ரோட்டில் உப்பு ஓடை அருகில் விருதுநகர் இந்திராநகரை சேர்ந்த செல்வக்குமார் (25) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் மகேந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகேந்திரன் நிலைதடுமாறி எதிரே வந்த காரில் விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் செல்வக்குமார் மீது ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்