மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து வாலிபர் பலி

முக்கூடல் அருகே மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து வாலிபர் பலியானார்.

Update: 2023-09-12 20:23 GMT

முக்கூடல்:

முக்கூடல் பாண்டியாபுரம் தெருவைச் சேர்ந்த தங்கப்பா மகன் இசக்கிமுத்து (வயது 28). இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லை. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். முக்கூடல் - ஆலங்குளம் சாலையில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிளில் பின்பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்