குளத்தில் மீன்பிடித்த போது வலையில் சிக்கி வாலிபர் சாவு
வேதாரண்யம் அருகே குளத்தில் மீன்பிடித்த போது வலையில் சிக்கி வாலிபர் உயிரிழந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது35). இவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே உள்ள அணைகரை குளத்தில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது குளத்தில் வலையை விரித்த போது அதில் சிக்கி குளத்தில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.