கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-12-23 18:28 GMT

ஜோலார்பேட்டைia அடுத்த ரெட்டியூர் பெரிய கம்மியப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ்/ இவருடைய மகன் ராகவேந்திரன் (வயது 32) அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்தார் இந்நிலையில் நேற்று முன்தினம் நோய் பாதிப்பு அதிகமான நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் ராகவேந்திரனின் செருப்பு மிதந்து கொண்டு இருந்தது. தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கி தேடியதில் ராகவேந்திரன் உடலை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்