தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

விழுப்புரம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டாா்.

Update: 2022-07-05 17:37 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சூர்யா (வயது 20). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்து விட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தனது செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதை அவரது தாயார் கண்டித்து வேலைக்கு ஏதும் செல்லாமல் இப்படி செல்போனில் விளையாடி கொண்டிருக்கிறாயே என்று கேட்டுள்ளார். இதில் மனமுடைந்த சூர்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்