பூதப்பாண்டி அருகே மாணவர் மர்ம சாவை விசாரிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் குழு

Update: 2022-07-10 20:33 GMT

நாகர்கோவில்:

கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர் நிஜிபூ. இவருக்கு சுஜிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உண்டு. மகன் ஆதில் முகமது (வயது 12) 7-ம் வகுப்பு படித்து வந்தார். சுஜிதாவின் சொந்த ஊர் குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் உள்ளது. எனவே சுஜிதா குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஆதில் முகமது வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே மாயமான மாணவர் 2 நாட்கள் கழித்து மணத்திட்டை பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜிதா, தன் மகன் சாவில் மர்மம் இருப்பதாக பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்திய நிலையிலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஆதில் முகமது மர்ம சாவு வழக்கை விசாரிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நியமித்து உள்ளார். இந்த குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-*******

Tags:    

மேலும் செய்திகள்