ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணி ஆய்வு
இட்டமொழி அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியனில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இட்டமொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணியை நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, கட்சி நிர்வாகிகள் லிங்கேசன், சுந்தர், முருக பெருமாள், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மதியரசு, செயலாளர் நம்பித்துரை, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.